ஆப்நகரம்

காலா: கர்நாடகாவில் காலாவுக்கு தடையால் ரூ. 20 கோடி இழப்பா?

கர்நாடகாவில் ரஜினிகாந்தின் காலா படம் திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் காலா படத்திற்கு ரூ. 20கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 31 May 2018, 12:29 pm
கர்நாடகாவில் ரஜினிகாந்தின் காலா படம் திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் காலா படத்திற்கு ரூ. 20கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil கர்நாடகாவில் காலாவுக்கு தடையால்
கர்நாடகாவில் காலாவுக்கு தடையால்


காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அங்கு காலா படத்தை திரையிட மாட்டோம் என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் ரஜினிகாந்த் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே அங்கு காலா படத்தை சுமார் 250 தியேட்டர்களில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முன்வந்தனர்.

இந்த நிலையில் காலா படத்தை திரையிடக் கூடாது என்று 10 கன்னட அமைப்புகள் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையில் கடிதம் கொடுத்து இருப்பதாக அதன் தலைவர் சா ரா கோவிந்த் தெரிவித்து இருந்தார். இதனால், காலா படத்தை கர்நாடகத்தில் திரையிட மாட்டோம் என்று கோவிந்த் அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே குசேலன் படம் வெளியானபோதும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட பிரச்சினையில் கர்காடகத்துக்கு எதிராக ரஜினி பேசியதாகக் கூறி அந்தப் படத்தை நிறுத்தினர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்ட பின்னர் அந்தப் படம் அங்கு திரையிடப்பட்டது.

அடுத்த செய்தி