ஆப்நகரம்

ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் அபராதம்: இன்று முதல் அமல்!

ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் இனி ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jun 2018, 9:52 am
ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் இனி ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
Samayam Tamil train
ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் அபராதம்:


இளைஞர்களிடையே வேகமாக பரவிவரும் செல்ஃபி கலாச்சாரம் சில சமயங்களில் அவர்களின் உயிரையும் பறித்து விடுகிறது. கடற்கரைகள், விலங்குகள், மலை உச்சிகள், ரயில் நிலையங்களில் ஏற்படும் ஆபத்தை உணராமல் இவர்கள் எடுக்கும் இத்தகைய விபரீத செல்ஃபிக்களால் நாளுக்குநாள் உயிரிழப்பும் அதிகமாகி வருகிறது.

இதன் முடிவாக தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்ஃபி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க, ரயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று(ஜூன்-22) முதல் ரயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி