ஆப்நகரம்

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறம்: நெல்லை அரசு மருத்துவமனைக்கு அபராதம்!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறம் இருந்ததால், 2,000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

Samayam Tamil 11 Nov 2018, 11:27 pm
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறம் இருந்ததால், 2,000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Samayam Tamil tirunelveli gh


தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு பரவுவதை தடுக்கவும், டெங்கு பரவுதற்கு காரணமாக இருக்கும் கொசுப் புழுக்களை ஒழிக்கவும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கொசுப் புழுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நீர் நிலைகளை பராமாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதற்கு ஏதுவாக இருக்கும் சுற்றுப்புறத்தை சீரமைக்காத நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

நெல்லை அரசு கல்லூரி மருத்துவக்கல்லூரி வளாகத்தில், கொசுக்கள் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததது. இதையடுத்து மருத்துவக்கல்லூரி வளாகத்தை சோதனையிடுமாறு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபாலுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். பின்னர், ஆணையர் சத்யகோபால் மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்து, வளாகம் சுகாதரமற்று இருப்பதை உறுதி செய்தார். இதையடுத்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்துக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி