ஆப்நகரம்

தமிழகத்தில் ரூ.20,000 கோடி வசூலித்த சாலை வரியை, வசூலிக்கவில்லை என அரசு பதில்; ஆர்.டி.ஐ தரும் அதிர்ச்சி தகவல்!

சாலை வரி வசூலிப்பதாகவும், வசூலிக்கவில்லை என்று மாறுபட்ட தகவல்கலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Sep 2018, 9:27 pm
சென்னை: சாலை வரி வசூலிப்பதாகவும், வசூலிக்கவில்லை என்று மாறுபட்ட தகவல்கலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil TN Roads


தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட சாலை வரி குறித்து, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

இதுதொடர்பாக பதிலளித்துள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலக பொது தகவல் அலுவலர், கடந்த 1974ஆம் ஆண்டு முதல் மோட்டார் வாகனங்களுக்கு தமிழகத்தில் சாலை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2010 முதல் 2018 பிப்ரவரி வரை வசூலிக்கப்பட்ட சாலை வரி பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒட்டுமொத்தமாக ரூ.20,000 கோடி அளவிற்கு சாலை வரி வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து சாலை வரி மூலம் வசூலிக்கப்பட்ட பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்று ராமகிருஷ்ணன் மீண்டும் விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள பொதுத் தகவல் அலுவலர் பிரபாவதி, தமிழ்நாட்டில் பொதுவாக சாலை வரி என்ற பெயரில் ஒரு வரி தமிழக அரசால் வசூலிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

RTI reveals Rs.20k road tax was not collected by Tamilnadu Govt.

அடுத்த செய்தி