ஆப்நகரம்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை: ராதாகிருஷ்ணன் தகவல்!

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விதிமுறைகள் மாற்றப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 25 Jun 2022, 6:26 pm
தமிழ்நாடு அளவில் பிரபலமாக திகழும் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். அண்மையில் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின் போது, சுகாதார துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவுத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டார். மக்களோடு நேரடி தொடர்புடைய துறைக்கு ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
Samayam Tamil ரேஷன் கடை
ரேஷன் கடை


இதையடுத்து, கூட்டுறவுத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள், நியாய விலைக் கடைகள் ஆகியவற்றில் தொடர் ஆய்வு செய்து வருகிறார். ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யும் அவர், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விதிமுறைகள் மாற்றப்படும் என்று ராதாகிருஷ்ணன் உணவு பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டுள்ளதாகவும், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விதிமுறைகள் மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தல் நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அரசி கடத்தலை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி