ஆப்நகரம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Samayam Tamil 27 Feb 2019, 10:52 am
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!


வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்டத்தலைவர் ஜோசப் கென்னடி செய்தியாளர்களிடம் கூறுகையில்;

ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கென தனி ஊழியர்கள் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பவும் ஊரக வளர்ச்சித்துறையில் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னர், தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

அடுத்த செய்தி