ஆப்நகரம்

அணி மாறுகிறாரா சைதை துரைசாமி? - டிடிவி தினகரனை சந்திக்க மறுப்பு

சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சைதை துரைசாமி, முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.

TNN 9 Mar 2017, 12:17 pm
சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சைதை துரைசாமி, முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அங்கிருந்த அனைவரும் சின்னம்மா என்று கூறிய போது, சைதைதுரைசாமி மட்டும் சசிகலா என பெயரைச் சொல்லி அழைத்தது, மன்னார்குடி கும்பலுக்கு அதிர்ச்சியை அளித்தது.
Samayam Tamil saidai duraisamy will join in ops team
அணி மாறுகிறாரா சைதை துரைசாமி? - டிடிவி தினகரனை சந்திக்க மறுப்பு


அதிமுக-வுக்கு எதிராக தீபா கூட்டம் கூட்டிய போது, சைதைதுரைசாமியை தக்கவைத்துக்கொள்ள சசிகலா தரப்பு அவருக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி அளித்தது. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து சென்றபோது இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என சைதைதுரைசாமி அறிக்கை வெளியிட்டார். இந்த செயலும் மன்னார்குடி தரப்பை அதிருப்தியடையச் செய்தது.

இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள டிடிவி தினகரன், முக்கிய நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார். இதற்காக சைதை துரைசாமிக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால், டிடிவி தினகரனை சந்திக்க மறுத்துள்ள துரைசாமி, கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

சசிகலா தரப்பு மீது அதிருப்தியாக இருக்கும் சைதை துரைசாமி, விரைவில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறுவான என அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி