ஆப்நகரம்

அலுவலகத் தொடர்புகள் அனைத்தும் இனி தமிழில் மட்டுமே; சேலம் ஆட்சியர் ரோகிணி பெருமை!

சேலம்: அரசு அலுவலக தொடர்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது பெருமைக்குரியது என்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி தெரிவித்தார்.

Samayam Tamil 1 Dec 2018, 3:52 pm
சேலத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிறைவு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி, மக்களின் அடையாளம் அவரவர் தாய் மொழி தான் என்று குறிப்பிட்டார். எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு.
Samayam Tamil Rohini


தமிழ் மொழிக்கு என தனியாக வளர்ச்சி துறை செயல்படுவதை எடுத்துகாட்டாக கூறினார். ஆங்கிலத்தில் இருந்து வந்த அரசு தொடர்பு சொற்கள் அனைத்தும் தமிழ் மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது என்றும் கூறினார்.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் ஷஹீத் திப்பு சுல்தான் பேரவை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகம்மது நபியைப் பற்றி தொடர்ந்து, பேஸ்புக்கில் இழிவாகவும் அவதூறு பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாண ராமனை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து பேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இஸ்லாமியரின் முகமது நபி நாயகம் அவர்களை பற்றி அவதூறு பரப்பி வரும் கல்யாண ராமனை இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் கைது செய்யக் கோரியும், தவறாக பதிவிட்ட இணையதளத்தை முடக்கக் கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி மீண்டும் தொடர்ந்து இந்த பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் தொடர்ந்து தவறாக அவதூறுகளை பரப்பி வருகிறார்.

இஸ்லாமியர்களின் மனம் புண்படுகின்ற விதமாக அவதூறுகளை பரப்பி வரும் எச் ராஜா, எஸ் வி சேகர், ஆகியோரை தொடர்ந்து கல்யாண ராமனும் கலவரம் தூண்டும் விதமாக பேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். எனவே இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்வதாக கூறினர்.

அடுத்த செய்தி