ஆப்நகரம்

சேலம் அருகே பயங்கர விபத்து; சம்பவ இடத்தில் ஆட்சியர் ரோகினி ஆய்வு!

பேருந்து விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆட்சியர் ரோகினி நேரில் ஆய்வு செய்தார்.

Samayam Tamil 1 Sep 2018, 5:15 am
சேலம்: பேருந்து விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆட்சியர் ரோகினி நேரில் ஆய்வு செய்தார்.
Samayam Tamil COllector Rohini


சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மாமாங்கம் என்ற இடத்தில் பூக்கள் கொண்டு சென்ற வாகனம் கவிழ்ந்தது. இதனால் நிலைதடுமாறி பெங்களூரு - ஏற்காடு தனியார் பேருந்தும், சேலம் - தர்மபுரி தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தைத் தொடர்ந்து சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, விபத்து நடந்த இடத்தை அதிகாலை வேளையில் நேரில் ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அதிகாரிகளிடம் உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

Salem Collector Rohini inspects bus accident place in early morning.

அடுத்த செய்தி