ஆப்நகரம்

மதுரையை பின் தொடரும் சேலம்: அம்மா உணவகங்களில் இனி முட்டை இலவசம்!

சேலம் மாநகராட்சி மூலம் அம்மா உணவகங்களில் மதிய உணவுடன் இலவசமாக முட்டை வழங்கப்படுகிறது.

Samayam Tamil 9 Apr 2020, 2:48 pm
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் இன்று முதல் மதிய வேளை உணவுடன் விலையில்லா முட்டை இலவசமாக வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil அம்மா உணவகம்


கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர் பயன்பெறும் வகையில் வழக்கத்தைவிட அதிக புத்துணர்ச்சியுடன் இயங்கிவருகின்றன. தினமும் லட்சக்கணக்கானோர் பசியாறும் இந்தத் திட்டத்தில் தற்போது புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 11 அம்மா உணவகங்களும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அனைத்து அம்மா உணவகங்களிலும் காலை வேளையில் இட்லியும், மதிய வேளையில் சாம்பார் சாதம், தக்காளி சாதம், மற்றும் தயிர் சாதமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நேற்று வரை 15 நாட்களில் 73 ஆயிரத்து 738 பயனாளிகளுக்கு அம்மா உணவகங்களில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

15 மாவட்டங்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) முதல் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் மதிய வேளை உணவுடன் சேர்த்து விலையில்லா முட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோர், வயதானோர், சாலையோரங்களில் வசிப்போர் உள்ளிட்ட அம்மா உணவகங்களில் உணவு உட்கொள்ளவரும் அனைத்து பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வகையில் மதிய வேளை உணவுடன் சேர்த்து விலையில்லா முட்டை வழங்கப்பட உள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாட்டில் முதன்முறையாக அம்மா உணவகங்களில் மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை நேற்று மதுரை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி வைத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் இதை தொடர்ந்து வருகிறது.

அடுத்த செய்தி