ஆப்நகரம்

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன்

சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் சிறைசென்ற பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

TNN 21 Jul 2016, 2:34 am
சேலம்: சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் சிறைசென்ற பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil salem court passed piyush manushs bail plea
சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன்


சேலத்தில் உள்ள முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை ரெயில்வே நிர்வாகம் தொடங்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய சேலம் குடிமக்கள் அமைப்பைச் சேர்ந்த பியூஷ் மனுஷ், கார்த்திக், முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் கார்த்திக், முத்து ஆகியோருக்கு மட்டும் ஏற்கெனவே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அவரை சிறையில் காவலர்கள் அடித்து உதைத்ததாக அவரது மனைவி மோனிகா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், பியூஷ் மனுஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சேலம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. பியூஷ் சார்பில் அவரது மனைவி மோனிகாவே வாதாடினார்.

பியூஷ் மனுஷ் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவர் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனை மறுத்த மோனிகா, தன் கணவர் பொதுநலனுக்காக போராடியதாகவும், சேலம் குடிமக்கள் குழு மீதுதான் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற பின் தீர்ப்பளித்த நீதிபதி, பியூஷ் மனுஷுக்கு மூன்று வாரங்களுக்கு தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

அடுத்த செய்தி