ஆப்நகரம்

சேலத்தில் தொடங்கிய ஜல்லிகட்டு : சீறிப்பாயும் 500 காளைகள்

சேலம் மாவட்டத்தில் உள்ள சூளைமேட்டில் ஜல்லிகட்டு போட்டி இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 17 Jan 2018, 11:57 am
சேலம் மாவட்டத்தில் உள்ள சூளைமேட்டில் ஜல்லிகட்டு போட்டி இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
Samayam Tamil salem jallikattu inaugurated by collector rohini
சேலத்தில் தொடங்கிய ஜல்லிகட்டு : சீறிப்பாயும் 500 காளைகள்


தமிழகத்தில் ஜல்லிகட்டு தொடங்கி எல்லா இடங்களில் நடைபெற்று வருகிறது. பொங்கலின் முதல்நாளன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஏராளமான காளைகளும், ஆயிரக்கணக்கான வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் பொங்கலின் இரண்டாம் நாளன்று பாலமேட்டில் ஜல்லிகட்டு நடைபெற்றது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜல்லிகட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். மேலும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை முதல்வர் மற்றும் துணை முதலவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் வெற்றிபெற்ற மதுரையை சேர்ந்த சந்தோஷுக்கு கார் பரிசாக கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள சூளைமேட்டில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. காலை 9 .30 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி கொடியசைத்து போட்டியை துவங்கி வைத்தார். இந்த போட்டியில் 500 காளைகளும் , 600 மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்கின்றனர்.மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தனித்தனி சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு தங்கம் , வெள்ளி , வீட்டுச் சாதனப்பொருட்கள் பரிசாக அளிக்கப்பட உள்ளன.

அடுத்த செய்தி