ஆப்நகரம்

ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா: சரணடையும் முன்பு அஞ்சலி

ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா, அஞ்சலி செலுத்தி விட்டு, பெங்களூரு சிறைக்கு புறப்படுகிறார்.

TNN 15 Feb 2017, 11:40 am
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா, அஞ்சலி செலுத்தி விட்டு, பெங்களூரு சிறைக்கு புறப்படுகிறார்.
Samayam Tamil sasikala goes to jaya memorial and starts to bangalore jail
ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா: சரணடையும் முன்பு அஞ்சலி


சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சரணடைய வேண்டும் என்று தெரிவித்தது. இதற்கிடையில் உடல்நிலை காரணம் காட்டி, 2 வாரங்கள் அவகாசம் தர உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனால் உடனடியாக பெங்களூரு சிறைக்கு செல்ல சசிகலா தயாராகி வருகிறார். தற்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக மெரினாவில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு காரில் பெங்களூரு சிறைக்கு செல்கிறார்.

Sasikala goes to Jaya Memorial and starts to Bangalore Jail.

அடுத்த செய்தி