ஆப்நகரம்

எங்களை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விளக்கம்!

அதிமுக.,வில் இருந்து எங்களை நிரந்தரமாக நீக்க, சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என்று, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 14 Feb 2017, 6:33 pm
அதிமுக.,வில் இருந்து எங்களை நிரந்தரமாக நீக்க, சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என்று, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil sasikala has no authority to sack us rebels say
எங்களை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விளக்கம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட எதிர்கோஷ்டி நபர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக, அறிவித்தார்.

கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் கூவத்துர் அருகே முகாமிட்டுள்ளனர். சசிகலா கட்டுப்பாட்டில் உள்ள எம்எல்ஏ.,க்கள் வெளியே வந்தால், அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக, அவர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அனைவரையும் சசிகலா, நிரந்தரமாகக் கட்சியில் இருந்து நீக்கினார். இதுபற்றி கருத்து தெரிவித்த மனோஜ்பாண்டியன், மதுசூதனன் உள்ளிட்டோர், ‘’சசிகலாவுக்கு எங்களை நீக்க அதிகாரம் இல்லை. அவரை மக்களே நிராகரித்துவிட்டனர். தற்போது நீதிமன்றமும் தண்டித்துவிட்டது. அனைவரும் அவரை நிராகரித்த நிலையில், அவர் எங்களை நிராகரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதிமுக என்றுமே எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கட்சிதான்,’’ எனக் குறிப்பிட்டனர்.

Rebel leaders, who were sacked by AIADMK general secretary V K Sasikala, said she had no authority to expel them from the party, since she was ousted by them on Friday last.

அடுத்த செய்தி