ஆப்நகரம்

சசிகலா முதல்வரானால் முதல் கையெழுத்து மதுவிலக்கா?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்றால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவார் என கூறப்படுகிறது.

TNN 3 Jan 2017, 8:24 am
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்றால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவார் என கூறப்படுகிறது.
Samayam Tamil sasikala naratajan will become chief minister of tn soon
சசிகலா முதல்வரானால் முதல் கையெழுத்து மதுவிலக்கா?


ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் பெரிய சக்தியாக சசிகலா நடராஜன் உருவெடுத்துள்ளார்.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும் என மூத்த அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.அதற்கேற்றார் போலவே சில தினங்களுக்கு முன்னர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சசிகலா தமிழக முதல்வராக விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக எம்.பி தம்பிதுரை கருத்து தெரிவித்திருந்தார்.தமிழக முதல்வராக பதவியேற்க சசிகலாவின் முதல் நகர்வுதான் தம்பிதுரையின் இந்த கருத்து என கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் 12-ஆம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பார் எனவும்,உசிலம்பட்டி அல்லது மத்திய மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து இடைத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் எனவும் நேற்று மாலை முதல் தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக சசிகலா முதல்வராக பதவியேற்றால்,அவர் கையெழுத்திடும் முதல் கோப்பாக பூரண மதுவிலக்கு இருக்கும் எனவும் இதன் மூலம் தமிழக மக்களிடையே நன்மதிப்பை பெற முடியும் எனவும் சசிகலா நம்புவதாகவும் கூறப்படுகிறது.உறுதிப்படுத்தப்படாத இந்த தகவல்கள் அனைத்தையும் மெய்பிக்கும் வகையில்,அதிமுக கட்சி வேலைகளில் சசிகலாவும் மும்முரமாக செயல்படத் துவங்கியுள்ளார்.உண்மை எது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்?

Sasikala Naratajan will become Chief minister of TN soon?

அடுத்த செய்தி