ஆப்நகரம்

முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பாவின் தாயார் மனு

மாநிலங்களவை எம்பி., சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி, முன் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

TNN 12 Aug 2016, 10:49 pm
மாநிலங்களவை எம்பி., சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி, முன் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil sasikala pushpas mother seeks anticipatory bail
முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பாவின் தாயார் மனு


அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா, தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறார். மேலும், தமிழகம் வந்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியதோடு, தன்னையும், குடும்பத்தினரையும் கைது செய்ய தமிழக அரசு முயற்சிப்பதாகக் கூறிய சசிகலா புஷ்பா, டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, முன்ஜாமீன் கேட்டு வாங்கியுள்ளார்.

ஆகஸ்ட் 22ம் தேதி வரை, சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், அவர்கள் மீது தமிழக போலீசில் ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி (62) முன்ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓய்வு பெற்ற ஆசிரியையான அவர் அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

எங்களது வீட்டில் பணிபுரிந்துவந்த பானுமதி என்ற பெண், புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்பேரில், சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மற்றும் சசிகலாவின் தாயாரான என்மீதும் புதுக்கோட்டை போலீசார், பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, கைது செய்யவும் முயற்சித்து வருகின்றனர்.

தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதால், இதுதொடர்பான கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வயது முதிர்வு காரணமாக அவதியுறும் நான், நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்பட தயாராக உள்ளேன்.

இவ்வாறு அந்த மனுவில் சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி