ஆப்நகரம்

"அச்சம் என்பது மடமையடா" எம்.எல்.ஏ-கள் கூட்டத்தில் பாட்டு பாடிய சசி

சசிகலா தலைமையில் இன்று நடைப்பெற்ற எம்.எல்.ஏ-கள் கூட்டத்தல் அவர் " அச்சம் என்பது மடமையடா " என்ற எம்.ஜீ.ஆரின் பாடலை பாடி தனது உரையை முடித்தார்.

TNN 8 Feb 2017, 4:10 pm
சென்னை : சசிகலா தலைமையில் இன்று நடைப்பெற்ற எம்.எல்.ஏ-கள் கூட்டத்தல் அவர் " அச்சம் என்பது மடமையடா " என்ற எம்.ஜீ.ஆரின் பாடலை பாடி தனது உரையை முடித்தார்.
Samayam Tamil sasikala sing a song accham anbathu madamayadaa
"அச்சம் என்பது மடமையடா" எம்.எல்.ஏ-கள் கூட்டத்தில் பாட்டு பாடிய சசி


ஓ.பன்னீர் செல்வத்தி நேற்றைய பரபரப்பான பேட்டிக்கு பிற்கு அதிமுகவின் எம்.எல்.ஏ-கள் கூட்டம் இன்று காலை கூட்டியது. இந்த கூட்டத்தில் 131 எம்.எல்.ஏ-கள் கலந்து கொண்டதாக அந்த கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று நடைப்பெற்ற எம்.எல்.ஏ-கள் கூட்டத்தில் குழுமி இருந்தவர்கள் மத்தியில் சசிகலா இன்று உரையாற்றினார். அந்த கூட்டத்தில் சசிகலா பேசும் போது, " அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. துரோகிகள் பின்னாள் செல்ல வேண்டாம். அதிமுகவினர் ஒற்றுமையாக உள்ளனர். சட்டசபையில் தி.மு.க., உறுப்பினர் பேசியதற்கு முதல்வர் பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிரிகள் சதி செய்கிறார்கள். நாம் யார் என்பதை காட்ட வேண்டும். துரோகமும் எதிரியும் கைகோர்த்து வருகின்றனர். இதற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். துரோகத்தை துரத்தி அடிப்போம் .

தற்போது பன்னீர் செல்வத்தால் கட்சிக்கு பிரச்சனைகள் எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் என்ற முறையில் இதை தீர்க்க வேண்டியது என்னுடைய கடமை. அம்மா இறந்தபின்னர் என்னை பொறுப்பு ஏற்குமாறு ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், நான் சோகத்தில் இருந்ததால் ஏற்றுக் கொள்ளவில்லை." என்று தெரிவித்திருந்தார்.

இதன்பிறகு தனது உரையின் இறுதியில் , " " அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா " என்ற எம்.ஜீ.ஆரின் பாடலை பாடி தனது உரையை சசிகலா முடித்தார்.

அடுத்த செய்தி