ஆப்நகரம்

சசிகலாவை கழகத்திலிருந்து கழட்டி விடும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 20 Aug 2017, 10:48 am
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sasikala to be expelled from admk tomorrow
சசிகலாவை கழகத்திலிருந்து கழட்டி விடும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!


அதிமுக அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வமும் சில நாட்களில் இணைப்பு பற்றிய நல்ல முடிவு வரும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், அனைவரும் எதிர்பார்ப்பதைப் போலவே கூடிய விரைவில் அணிகள் இணைப்பு நடக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக சட்ட விதிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் அதன்படி சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

அடுத்த செய்தி