ஆப்நகரம்

ஜெயலலிதாவைப் போன்றே பச்சை நிற சேலையில் வந்த சசிகலா

அதிமுக மூத்த நிர்வாகிகளை இன்று போயஸ் கார்டனில் சந்தித்த சசிகலா ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சை நிற சேலை அணிந்து இருந்தார்.

TOI Contributor 29 Dec 2016, 1:10 pm
அதிமுக மூத்த நிர்வாகிகளை இன்று போயஸ் கார்டனில் சந்தித்த சசிகலா ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சை நிற சேலை அணிந்து இருந்தார்.
Samayam Tamil sasikala was wearing green saree as jayalalithaa
ஜெயலலிதாவைப் போன்றே பச்சை நிற சேலையில் வந்த சசிகலா


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பச்சை நிறம் தான் பிடிக்கும் என்பதுடன் இந்த நிறத்தை அவருக்கான ராசி நிறமாகவும் பார்த்தார். பெரும்பாலும் அவர் பச்சை நிறத்திலான சேலைகளையே முக்கிய நிகழ்வுகளுக்கு அணிந்து வந்தார். அவர் இறந்த போதும் அவருக்குப் பிடித்த பச்சை நிற பட்டுப் புடவைதான் அவர் மீது போர்த்தப்பட்டு இருந்தது.

இதையே பிரதிபலிக்கும் வகையில் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து வலியுறுத்த முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் சென்று இருந்தபோது, சசிகலா பச்சை நிறத்தில் சேலை அணிந்து இருந்தார்.

மேலும், சசிகலாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பது போன்ற பேனர் பொதுக்குழு கூட்டம் நடந்த ஸ்ரீவாரு திருமண மண்டபம் முன்பு வைக்கப்பட்டது. அந்த பேனர் புகைப்படத்திலும் சசிகலா பச்சை நிறத்தில் சேலை கட்டி இருந்தார்.

அடுத்த செய்தி