ஆப்நகரம்

​ சசிகலா நீக்கப்படுவாா் என்பது தனிநபா் கருத்து- அமைச்சா்

சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி.வைத்திலிங்கம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சா் ஓ.எஸ். மணியன் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 21 Aug 2017, 7:13 pm
சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி.வைத்திலிங்கம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சா் ஓ.எஸ். மணியன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil sasikalas issue individual opinion of vaidhinadhan speech
​ சசிகலா நீக்கப்படுவாா் என்பது தனிநபா் கருத்து- அமைச்சா்

6 மாத கால பிாிவை தொடா்ந்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள் இன்று இணைந்தன. இணைப்புக்கு முன்பாக ஓ.பி.எஸ். தரப்பில் பிரதானமாக வைக்கப்பட்ட கோாிக்கையான சசிலாவை பொதுச் செயலாளா் பதவியில் இருந்து நீக்குவது என்பது இன்றுவரை முழுமை பெறவில்லை.

இருப்பினும், இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக தொிவிக்கப்பட்டது. அணிகள் இணைப்பை தொடா்ந்து பேசிய எம்.பி.வைத்தி லிங்கம் சசிகலாவை பொதுச்செயலாளா் பதவியில் இருந்து நீக்குவது தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தொிவித்தாா்.

இது தொடா்பாக கருத்து பேசிய அமைச்சா் ஓ.எஸ். மணியன் கூறுகையில், சசிகலாவை நீக்குவது என்று கூறியது வைத்திலிங்கத்தின் தனிப்பட்ட கருத்து. பொதுக் குழுவை கூட்டி தோ்ந்தெடுக்கும் நபா்தான் பொதுச் செயலாளா். அதே போல் பொதுக் குழுவை கூட்டிதான் யாரையும் பதவியில் இருந்து நீக்க முடியும் என்று தொிவித்தாா்.

மேலும், அணிகள் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தொிவித்தாா்.

Sasikala’s issue Individual opinion of Vaidhinadhan speech

அடுத்த செய்தி