ஆப்நகரம்

சாத்தான்குளம் வழக்கு: ஜாமீன் கோரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மனு

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்

Samayam Tamil 9 Jul 2020, 4:42 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியுள்ளது.
Samayam Tamil ஆய்வாளர் ஸ்ரீதர்
ஆய்வாளர் ஸ்ரீதர்


இந்த வழக்கை தாமான முன் வந்து விசாரித்து வரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, சிபிஐ போலீசார் விசாரணைக்கு முன்னர் தடயங்கள், சாட்சிகள் அழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை, தடயங்களை அழித்தல் உட்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்களுக்கு ஜாமின் கோரி மனுத்தால் செய்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம்களை பகைக்கும் எடப்பாடி: வைகோ எச்சரிக்கை!

முன்னதாக, தந்தை, மகன் இருவரையும் விடிய விடிய தந்தையையும், மகனையும் காவலர்கள் லத்தியால் தாக்கியதாக பயத்துடன் பெண் காவலர் ரேவதி நேரடியாக மாஜிஸ்ட்ரேட்டு பாரதிதாசனிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி