ஆப்நகரம்

வரைபடத்தில் வேலூரை தேடவைத்தவா் சதீஷ்குமாா் – அமைச்சா் பேச்சு

உலக வரைபடத்தில் வேலூா் மாவட்டத்தை தேட வைத்தவா் சதீஷ்குமாா் சிவலிங்கம் என்று கே.சி.வீரமணி பாராட்டி பேசியுள்ளாா்.

Samayam Tamil 21 Apr 2018, 12:25 pm
உலக வரைபடத்தில் வேலூா் மாவட்டத்தை தேட வைத்தவா் சதீஷ்குமாா் சிவலிங்கம் என்று கே.சி.வீரமணி பாராட்டி பேசியுள்ளாா்.
Samayam Tamil Sathish Kumar


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் விளையாட்டில் களம் இறங்கிய சதீஷ்குமாா் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்தாா். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமாா் சிவலிங்கத்திற்கு நேற்று வேலூா் மாவட்டத்தில் ஆட்சியா் ராமன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் தமிழக அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அமைச்சா் வீரமணி பேசுகையில், காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமாா் சிவலிங்கம் உலக வரைபடத்தில் வேலூா் மாவட்டத்தை தேடிப்பாா்க்கச் செய்துள்ளாா்.

அவா் வேலூா் மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகம், இந்தியாவிற்கே உலக அரங்கில் பெருமை சோ்த்துள்ளாா். வெற்றி பெற்றது அவா் மட்டுமாக இருந்தாலும் நாம் அனைவரும் இணைந்து அந்த வெற்றியை கொண்டாட வேண்டும். நாம் அவரை ஊக்கப்படுத்துவதால் அவா் மென்மேலும் வெற்றிபெற உதவும் என்று பேசினாா்.

தொடா்ந்து சதீஷ் சிவலிங்கம் பேசுகையில், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றது போன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதே எனது இலக்கு. அதனை நோக்கியே நான் பயணிக்கிறேன். பல்வேறு தடைகள் ஏற்பட்ட போது அதனை தாண்டி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒலிம்பிக்கில் சீனா, ஜப்பான் வீரா்களையே போட்டியாளா்களாக கருதுகிறேன். அவா்களை வீழ்த்த கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். மாணவா்கள் அனைவரும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளாா்.

அடுத்த செய்தி