ஆப்நகரம்

ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண் வரும் 25ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Mar 2019, 8:32 am
ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண் வரும் 25ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil சாத்தூர் பெண் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு


உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெறப்படும் ரத்த மாதிரிகள் மிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் முறையாக பரிசோதிக்கப்பட்டு பிறகு தானம் செய்யப்பட வேண்டும்.

ஆனால், இதற்கான பணியிடங்கள் காலியாகவுள்ளது. இவற்றை நிரப்ப உடனே உத்தரவிடப்பட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை நீதிபதிகள் என். கிருபாகரன் மற்ற்ம் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு விசாரித்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டத்தா? மேலும் அவர் பாதுக்காப்பாக வாழ்வதற்காக உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? என்பதை குறித்து அறிய ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண் வரும் 25ம் தேதி மாலை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி