ஆப்நகரம்

சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை

புதுடில்லி : பாலியல் தொல்லை வழக்கில் சசிகலா புஷ்பா வரும் 29-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராக வேண்டும் , மேலும் அவரை 6 வார காலத்திற்கு கைது செய்ய தடை வித்திக்கபட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 26 Aug 2016, 12:24 pm
புதுடில்லி : பாலியல் தொல்லை வழக்கில் சசிகலா புஷ்பா வரும் 29-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராக வேண்டும் , மேலும் அவரை 6 வார காலத்திற்கு கைது செய்ய தடை வித்திக்கபட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil sc gives interim protection to rajya sabha mp sasikala pushpa
சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை


பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது வ‌ழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, நேரில் ஆ‌‌ஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கக்‌கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு‌தாக்கல் செய்தார்
.SC gives interim protection to Rajya Sabha MP Sasikala Pushpa and her family for 6 weeks in a sexual harassment case lodged by her maid— ANI (@ANI_news) August 26, 2016


அந்த மனுவில் தம் மீதான குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு முன்னதாக கூறப்பட்டது; தற்போது அதனை கிளப்பி எனக்கு ஏதிராக சதி செய்கின்றனர். தமிழகத்தில் சென்று ஆஜராக அச்சம் இருப்பதாகவும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சசிகலா புஷ்பாவின் கோரிக்கையை நிராகரித்து, வரும் 29-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. மேலும் சசிகலா புஷ்பாவை 6 வாரத்திற்கு கைது செய்ய தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி