ஆப்நகரம்

இந்த பீட்டா சும்மாவே இருக்காது போலயே; ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

ஜல்லிக்கட்டு வழக்கில் உரிய விளக்கம் அளிக்கக்கோரி, உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TNN 6 Nov 2017, 4:19 pm
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உரிய விளக்கம் அளிக்கக்கோரி, உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil sc notice to tamilnadu govt in jallikattu case
இந்த பீட்டா சும்மாவே இருக்காது போலயே; ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!


ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, காளை மாடுகளை விளையாட்டுப் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இதன் பிறகு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கு:

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், திருநல்லூர், மரவப்பட்டி ஆகிய இடங்களில் காளை மாடுகள் கொடூரமாக நடத்தப்பட்டதாக காட்சியளிக்கும் வீடியோக்களை பீட்டா அமைப்பு சேகரித்தது.

பீட்டா தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள்:

* தள்ளாடி கீழே விழும் மாடுகளை மீண்டும் வலுக்கட்டாயமாக எழுப்பி நிற்கவைத்தல்

* எந்தவித மருத்துவ உதவியோ, ஓய்வோ மாடுகளுக்கு வழங்கப்படவில்லை

* மாடுகளின் வால்கள் முறுக்கப்பட்டதால் அவை முறிந்துள்ளன

* ஆயுதங்களால் தாக்குதல், மூக்கணாங்கயிறு மிகவும் இறுக்கமாக இருந்ததால் அவற்றை இழுக்கும் போது ரத்தம் வந்தன

* சில வேளைகளில் மனித உயிரும் பலியாகிறது

உச்சநீதிமன்றம் உத்தரவு:

இதனைக் கொண்டு புதிய சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆட்சேபங்கள் தொடர்பாக, தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

SC notice to Tamilnadu Govt in Jallikattu Case.

அடுத்த செய்தி