ஆப்நகரம்

கார்த்தி சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை உயர்நீதிமன்றமே விசாரித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Jan 2018, 1:40 pm
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை உயர்நீதிமன்றமே விசாரித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil sc orders karthi chidambaram inx media case to high court
கார்த்தி சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!


மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, வெளிநாட்டில் இருந்து நிதி திரட்ட, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் எப்.ஐ.பி.பி அனுமதி பெற்றது.

இதில் விதிகள் மீறப்பட்டதாகவும், அதற்கு கார்த்தி சிதம்பரம் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

மேலும் அமலாக்கத்துறை இயக்குநரகமும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. இதுதொடர்பான விசாரணைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார்.

இந்த விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி, கார்த்தி கோரிக்கை பற்றி உயர்நீதிமன்றமே முடிவெடுக்கலாம் எனக் கூறியுள்ளது.

SC orders Karthi Chidambaram INX media case to High Court.

அடுத்த செய்தி