ஆப்நகரம்

சாதிக் கொடுமைக்கு ஆளான ஊராட்சித் தலைவர்: தேசியக் கொடியேற்றினார்!

பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவி அமிர்தம் இன்று தேசியக் கொடியேற்றினார்.

Samayam Tamil 20 Aug 2020, 12:55 pm
திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக அமிர்தம் ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுத் தொகுதியாக இருந்த நிலையில் இந்தத் தேர்தலின் போது ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.
Samayam Tamil national flag


இதன்காரணமாக அமிர்தம் போட்டியிட்டு முதல்முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதற்கு முன்னர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்த ஹரிதாஸ் என்பவரால் குடியரசு தின விழாவில் அவமதிக்கப்பட்டுள்ளார். தேசியக் கொடி ஏற்றவும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவிலும் அமிர்தத்தை தேசியக் கொடியேற்ற அனுமதிக்கவில்லை.

ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார், துணை தலைவர் ரேவதியின் கணவர் விஜய் ஆகியோரும் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்துக்கு எதிராக சாதி ரீதியாக பாகுபாடு காட்டிவந்துள்ளனர். இது தொடர்பாகா நாம் ஏற்கெனவே நமது சமயம் தமிழில் பதிவு செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: அரசின் முடிவை அறிவித்த அமைச்சர்!

ஆத்துப்பாக்கம் அமிர்தம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் கவனம் பெறத் தொடங்கிய நிலையில் இன்று அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் முன்னிலையில் தேசியக் கொடியேற்றினார். இதில் வருவாய்த் துறையினர் பொது மக்கள் கலந்துகொண்டனர். அத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் நாற்காலியிலும் அமர்ந்தார்.

பஞ்சாயத்து தலைவர் தேசிய கொடியேற்ற எதிர்ப்பு: திருவள்ளூரில் சாதி பாகுபாடு!

மேலும் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அமிர்தம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி