ஆப்நகரம்

மாணவர் சேர்க்கை தொடக்கம்: இன்று முதல் பள்ளிகளில் சேர்க்கலாம்

தமிழகம் முழுவதும் 1, 6 மற்றும் 9ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் இன்று முதல் தொடங்குகிறது.

Samayam Tamil 17 Aug 2020, 10:18 am
தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
Samayam Tamil கோப்புப்படம்


கொரோனா காலத்தில் அனைத்து நிறுவனக்களும், தொழில்களும், மையங்களும் மூடப்பட்டன. அந்த வகையில் பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. சிலகாலம் கழித்து தளர்வுகளுக்குப் பிறகு தொழில்கள் இயல்பு நிலைக்கு மீண்டு வர முயன்று வருகின்றன. ஆனால், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தங்கள் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை. எனினும், தேர்வு முடிவுகள், மதிப்பெண் சான்றுகள் வழங்குதல் என பள்ளி நிர்வாக வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

தேர்வு முடிவுகள் வந்த பிறகு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளிகள் திறப்பு ஆகியவை குறித்துக் கேள்விகள் அதிகரித்தன. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரையிலும் எந்த முடிவும் அறிவிக்கவில்லை.

முன்னதாக, கொரோனா முடிவடைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 1, 6 மற்றும் 9ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் இன்று முதல் தொடங்குகிறது.

பள்ளிக் கல்விக் கட்டணம் 25 சதவீதம் கட் : மாநில அரசு அதிரடி உத்தரவு!!

அதாவது தொடக்கக்கல்வி, நடுநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதே சமயம், மேல்நிலைக்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாணவர் சேர்க்கை நடைபெறும் போதே இலவச புத்தகங்கள், புத்தகப் பை மற்றும் காலணிகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளும் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி