ஆப்நகரம்

ஆரம்ப பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!

நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் ஏன் திறக்கப்படுகின்றன என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

Samayam Tamil 28 Oct 2021, 7:15 am
தமிழக பள்ளிகள் ஏன் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்படுகின்றன என்பதற்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
Samayam Tamil tn school reopen


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் ஊராட்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கிளை நூலகக் கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற கொறடா கோவி.செழியன், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தீபாவளி பரிசு: கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!
நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் மனரீதியாக மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு வரவேண்டும் என்பதற்காக நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
EXCLUSIVE: சசிகலாவை கட்சியில் இணைக்கலாம்: அதிமுக மாஜி அமைச்சர்!
பெற்றோர்களின் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிக்கு வருவதும், வராததும் மாணவ, மாணவிகள் விருப்பம் என்று கூறியுள்ளோம். இருந்தபோதிலும் பள்ளிக்கு வராத மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும்.

55 சதவிகிதம் அளவு வழக்கமான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்த முடியாது என்பதால் டிசம்பர் மாதத்தில் இருந்து மாதந்தோறும் மாதிரி தேர்வுகள் நடைபெறும். தேர்வு முறையில் மாற்றமின்றி மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழக்கமான தேர்வுகள் நடைபெறும்” என்று கூறினார்.
ஓபிஎஸ் சொன்னதில் என்ன தவறு? ஜோடி சேரும் ஜேசிடி!
தொடர்ந்து பேசிய அவர், “ஊர்ப்புற நூலகர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார். சி.ஏ தணிக்கையாளர்கள் அலுவலகத்தில் அலுவலக மொழியாக இந்தியில் நடைமுறைப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடப் பிரிவில் உள்ள மேஜர் லாங்வேஜ், மைனர் லாங்குவேஜ் என்பது தவறானது. நமது தாய்மொழியான தமிழ் மைனர் லாங்குவேஜ் ஆக இருக்கிறது. தேவையில்லாத முடிவுகளை ஒன்றிய அரசு எடுக்கிறது” என்று கூறினார்.

அடுத்த செய்தி