ஆப்நகரம்

சேலத்தில் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து; பள்ளி மாணவிகள், ஓட்டுநர் படுகாயம்!

சேலம்: தனியார் பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில், 5 பள்ளி மாணவிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர்.

Samayam Tamil 7 Dec 2018, 7:41 pm
சாலை விபத்துகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் வாகன விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முழுமையாக கடைபிடிப்பதில்லை.
Samayam Tamil Accident


குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை விதிகளை மீறி, அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். அதிலும் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றிச் செல்வது வழக்கமாகியுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், ஆட்டோ ஓட்டுனர்கள் அஞ்சுவதே கிடையாது.

இதன் விளைவாக அவ்வபோது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் சேலம் 4 ரோடு பகுதியில் இன்று காலை 13 பள்ளி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, ஆட்டோ ஓட்டுநர் அதிவேகமாக சென்றுள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற தனியார் பேருந்து மீது மோதி ஆட்டோ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சரவணகுமார், பள்ளி மாணவிகள் ஹரித், காயத்ரி, ஹரிஸ்மிதா, ஹரிணி ஆகிய ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.

இவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் விபத்துகள் தொடராமல் இருக்க, ஆட்டோ ஓட்டுநர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி