ஆப்நகரம்

தமிழ்நாட்டில் எப்போது சூரிய கிரகணம் தெரியும்? வெளியானது பதில்...

இந்தியாவில் கொரோனா கிரகணம் தெரியும் என்ற தகவலைத் தொடர்ந்து பகுதி வாரியாக நேரம் வெளியாகியுள்ளது. இந்த கிரகணம் அரிதான நீண்ட சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுபற்றி விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

Samayam Tamil 21 Jun 2020, 8:31 am
நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை(ஜூன் 21) தோன்றுகிறது. கொரோனா தாக்குதல் என உயிர்க்கொல்லி வைரசால் உலகமே முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் தோன்றும் குறிப்பிட்ட கிரகணம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Samayam Tamil சூரிய கிரகணம்


இந்த சூரிய கிரகணம் இந்தியா, ஆப்ரிக்கா, சீனாவின் ஒரு பகுதியில் தெரியும் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சூரிய கிரகணம் இந்தியாவின் நேரப்படி எப்போது மக்களால் காண முடியும் என இந்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

* ராஜஸ்தான் - காலை 10: 12 மணி முதல் 11: 50 மணி வரை,

* மும்பை - காலை 10 மணி முதல் பிற்பகல் 1: 27 மணி வரை,

* பெங்களூர் - காலை 10: 13 மணி முதல் பிற்பகல் 1: 31 மணி வரை,

* புதுடெல்லி - காலை 10: 20 மணி முதல், பிற்பகல் 1: 48 மணி வரை,

* சென்னை - 10: 22 மணி முதல் பிற்பகல் 1: 41 மணி வரை,

* கொல்கத்தா - 10: 46 மணி முதல் பிற்பகல் 1: 48 மணி வரை


குறிப்பிட்ட பகுதி நேரத்தை வைத்துச் சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கிரகணத்தை ரசிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

“கொரோனாவை ஒழிக்கும் கிரகணம்”, “அரிதான கிரகணம்” சுவாரஸ்ய தகவல்கள்!

மேலும் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இந்த கிரகணத்தை அரிதான நீண்ட சூரிய கிரகணம் எனக் குறிப்பிட்டுள்ளது. அதே வேளையில் ஜூன் 21ஆம் தேதிதான் 2020ஆம் ஆண்டின் மிக நீளமான நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது.

6 மணி நேரம் தோன்றும் இந்த கிரகணத்தின் முக்கிய காட்சியாகச் சூரியன் தீ வலையம் போல் திகழும் காட்சி அமையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாளை தோன்றும் சூரிய கிரகணத்தை மக்கள் யாரும் பாதுகாப்பின்றி வெறும் கண்களால் ரசிக்க வேண்டாம் என்றும் அது அபத்தானதாக அமையும் என அறிவியல் வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி