ஆப்நகரம்

நாட்டின் 2வது தூய்மையான புனிதத்தலமாக மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு!

ஜல் சக்தி அபியான் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிற்கு இப்படியொரு சிறப்பு கிடைத்துள்ளது.

Samayam Tamil 10 Sep 2019, 1:47 pm
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தூய்மையான புனிதத் தலங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 10 முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டன.
Samayam Tamil Meenakshi Temple


இவற்றின் தூய்மை, சுகாதாரம் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இதையடுத்து தூய்மையின் அடிப்படையில் புனிதத் தலங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் நாட்டின் தூய்மையான புனிதத் தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

புகழேந்தி ஏன் அப்படி பேசினார்? டிடிவி தினகரன் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?

அதில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் மதுரை மாநகராட்சி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகியவை இணைந்து தூய்மை மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டது.

கோவிலைச் சுற்றி 25 நவீன மின்னணு கழிப்பறைகள், குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளை தடை செய்தல், 24 மணி நேரமும் துப்புரவு பணிக்கு துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்தல், நவீன மண் கூட்டும் இயந்திரம்,

மூன்றே நாளில் இத்தனை கோடி முதலீடா?- தமிழக அரசுக்கு ராமதாஸ் வாழ்த்து!

63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம்பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரம் அமைத்தல், பக்தர்களை அழைத்து செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்கள் இயக்குதல், மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் புராதன சின்னங்கள் அமைத்து மேம்படுத்துதல் போன்ற பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம் நாட்டிலேயே 2வது சிறந்த சுகாதாரமான புனித தலமாக மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி தஹில் ரமணி அமர்வில் 2வது நாளாக வழக்குகள் விசாரிக்கப்படவில்லை!

அடுத்த செய்தி