ஆப்நகரம்

'எப்படியாவது உடலை கொண்டு வாங்க'... குழந்தைங்க காத்துகிட்டு இருக்கு...

கோவையில் மாரடைப்பு காரணமாக மரணித்த வடமாநில இளைஞரின் உடலை உத்திரபிரதேச மாநிலம் கொண்டுசெல்ல அனுமதிசீட்டுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு பிரேதத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 30 Apr 2020, 8:21 pm
கோவை அன்னூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமி ஐயங்கார் பேக்கரி கடையில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார்(38) என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்த கடையின் உரிமையாளர் கரிகாலன் இவருக்கு ஊரடங்கு காலத்திலும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil அசோக்குமார்


இந்த நிலையில், அசோக்குமார் இன்று காலை உடல் நலம் சரியில்லை என கூறியதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இவருடன் பணியாற்றிய உ.பி.மாநில தொழிலாளர்கள் ஆகாஷ், சரவணன், லல்லு ஆகியோர் கலந்து ஆலோசனை செய்து அசோக் குமார் குடும்பத்தில் பேசி கோவையில் உடல் தகனம் செய்யலாமா என கேட்டுள்ளனர்.

சென்னை: தனியார் மற்றும் அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு..!

அதற்கு ''அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். தயவு செய்து உடலை எப்படியாவது உத்திரபிரதேசம் அனுப்பிவைக்குமாறு கதறி அழுதுள்ளனர். இதனால் மனமிறங்கிய கடை உரிமையாளர் அவரது உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கமுடிவு செய்தார்.

இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் சிறப்பு அனுமதிவேண்டி பிரேதத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்தபடியே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

கோவையில் இருந்து உ.பி 2300 கி.மீ. தூரமுள்ள நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரண்டு ஓட்டுனர்கள் இரவு பகலாக வாகனத்தை இயக்க தயார் நிலையில் இருக்கின்றனர். உடலை கொண்டுச் செல்ல உத்திரபிரதேச மாநில அரசும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற நிலையில் இரு மாநில அரசுகளின் அனுமதிக்காக பிரேதத்துடன் காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி