ஆப்நகரம்

இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு

“இலங்கையில் ராஜபக்ஸே பிரமராக பெறுப்பேற்றதில் சீனாவின் சதி இருப்பதாக தெரியவில்லை. இந்தியாதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.”

Samayam Tamil 28 Oct 2018, 3:02 pm
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 108_23405


சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உலா என்ற ஆப் மூலம் இயங்கும் டேக்ஸி சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்த அவர், #Metoo சாமானிய பெண்களுக்கு பயன்படவில்லை என்றார்.

இலங்கையில் பிரதமர் மாற்றம் பற்றிப் பேசிய அவர் “இலங்கையில் ராஜபக்ஸே பிரமராக பெறுப்பேற்றதில் சீனாவின் சதி இருப்பதாக தெரியவில்லை. இந்தியாதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.” என்று கூறினார்.

“தமிழகத்தில் அடுத்து இருபது தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தாலும் அது தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு” என்று கூறினார்.

அடுத்த செய்தி