ஆப்நகரம்

அன்புச்செழியன் இல்லையென்றால் பாதி படங்கள் வெளியாகியிருக்காது: சீமான் பரபரப்பு பேச்சு!

நேற்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சென்னையை அடுத்துள்ள மதுரவாயில் பகுதியில் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்தார்

TNN 27 Nov 2017, 12:05 pm
நேற்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சென்னையை அடுத்துள்ள மதுரவாயில் பகுதியில் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
Samayam Tamil seeman commented in support of financier anbuchezhiyan
அன்புச்செழியன் இல்லையென்றால் பாதி படங்கள் வெளியாகியிருக்காது: சீமான் பரபரப்பு பேச்சு!


அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,”தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்யும் முடிவைத் தவிர்த்திருந்திருக்கலாம். அவரது இழப்பு வருத்தமளிக்கிறது.

அசோக்குமாரின் தற்கொலைக்கு அன்புச்செழியனை மட்டும் காரணம் சொல்ல முடியாது. அன்புச் செழியன் இல்லை என்றால் தமிழில் பாதி படங்களுக்கு மேல் வெளியாகி இருக்காது. படம் தயாரிக்க வட்டிக்கு கடன் வாங்குவது தமிழ் சினிமாவில் புதிதல்ல. அதைத் தவிர்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் தேர்தல் குறித்து பதிலளித்த சீமான், நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலைக்கோட்டுதயம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி