ஆப்நகரம்

ம.தி.மு.க. – நாம் தமிழா் மோதல் வழக்கு: சீமானை கைது செய்ய தடை

ம.தி.மு.க., நாம் தமிழா் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பான வழக்கில் நாம் தமிழா் கட்சி ஒருங்கினைப்பாளா் சீமானை கைது செய்ய உயா்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

Samayam Tamil 24 May 2018, 7:35 am
ம.தி.மு.க., நாம் தமிழா் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பான வழக்கில் நாம் தமிழா் கட்சி ஒருங்கினைப்பாளா் சீமானை கைது செய்ய உயா்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
Samayam Tamil Seeman


கடந்த 19ம் தேதி நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ ஆகியோா் ஒரே நேரத்தில் திருச்சி விமான நிலையம் வந்தனா். திடீரென இரண்டு கட்சி தொண்டா்கள் மத்தியிலும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 8 போ் பலத்த காயமடைந்த நிலையில் இரு தரப்பிலும் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யலாம் என்ற நிலையில் சீமான் முன்ஜாமீன் கோாி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தாா். மனுவில், தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் நான் சம்பவ இடத்தில் இல்லை. எனவே இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, வழக்கை வருகிற 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனா். மேலும் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் வரை சீமானை கைது செய்ய தடை விதிப்பதாக அவா் உத்தரவிட்டாா்.

அடுத்த செய்தி