ஆப்நகரம்

நெல்லைக் கண்ணன் பேச்சு அறச்சீற்றமே..! அவர் தனிநபரல்ல - கொந்தளிக்கும் சீமான்

​​இந்நிலையில், காங்கிரஸ்காரரான நெல்லைக் கண்ணனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Dec 2019, 5:17 pm
பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உள்ளிட்டோரை அவமரியாதை செய்யும் விதத்தில் பேசியதாக பேச்சாளர் நெல்லைக் கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil nellai kannan seeman


இந்நிலையில் நெல்லைக் கண்ணன் உடல்நலக் குறைவால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லைக் கண்ணனை கைது செய்ய வேண்டும் என்றும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ்காரரான நெல்லைக் கண்ணனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பெருமதிப்பிற்குரிய அப்பா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே!

கைதாகிறார் நெல்லை கண்ணன்? ஹெச்.ராஜா புகார்!

நாட்டின் பொருளாதாரத்தைச்சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத்துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம்.அது வன்முறையைத்தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!” என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி நெல்லை கண்ணன் விவகாரத்தில் நெல்லைக் கண்ணனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனை ஆதரித்தும் எதிர்த்தும் நெட்டிசன்கள் பதிலுக்கு தங்கள் தரப்பு பதில்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி