ஆப்நகரம்

பாதிப்பு அதிகம்..! விழிப்புணர்வை கடைபிடிக்காத மேலப்பாளையம் கிராமம்...

மேலப்பாளையத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தும்கூட கிராம மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வருகின்றனர்.

Samayam Tamil 10 Apr 2020, 8:51 pm
கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் 144 தடையுத்தரவு அமல்படுத்தபட்டு இன்றோடு 17 தினங்கள் ஆன நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் கொரானா பாதிப்போடு 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil மேலப்பாளையம் கிராமம்


நேற்று மட்டும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் குடும்பத்தினர் 16 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இந்நிலையில் மேலப்பாளையம் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பஜார் மற்றும் முக்கிய வீதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

கொரோனா போர் களத்தில் 5 பெண் அதிகாரிகள்..! யார் இவர்கள்?

மாநகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை பல்வேறு கடுமையான விதிமுறைகளை கடைபிடித்தாலும் மேலப்பாளையம் பகுதிகளில் மென்மையான அணுகுமுறையே கடைபிடித்து வருகின்றனர். காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை கடுமையான முறையில் கடைபிடித்தால் மட்டுமே நெல்லையில் கொரானா பரவலை தடுக்கமுடியும். மேலும் கொரானா பரவலை தடுக்க அங்கு செயல்படும் 4 வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டு உள்ளது. இதனால் அந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

அடுத்த செய்தி