ஆப்நகரம்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்: எடப்பாடியை மீண்டும் சீண்டும் செல்லூர் ராஜு?

முல்லைப் பெரியாறு போராட்டம் தொடர்பாக செல்லூர் ராஜு பேசியது கவனம் பெற்றுள்ளது.

Samayam Tamil 4 Nov 2021, 2:55 pm
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக ஐந்து மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ளது. இதுகுறித்து முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
Samayam Tamil sellur raju


வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுத்தது தான் அதிமுக தோல்விக்கு காரணம் என கருணாஸ் பேசியுள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இதை எங்கள் தலைவர்களிடம் கேளுங்கள் என பதில் அளித்தார்.

“நவம்பர் 9ஆம் தேதி 5 மாவட்டங்களிலும் மாவட்ட வாரியாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த பணியை மதுரை மாநகர் மாவட்ட கழகம், மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வர் அசத்தல்!
அம்மா தான் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சொன்னதுபோல் சட்டப்போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் நீதி பெற்று உச்ச நீதிமன்றம் முதலில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். படிப்படியாக 152 உயர்த்தலாம் என்று பெற்றவர்.

ஆனால் கடைசியில் பார்த்தீர்களென்றால் ஆட்சி மாற்றம் வந்தது, அதில் அன்றைக்கு கேரள அரசு, சட்டமன்றத்தைக் கூட்டி உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சட்டம் இயற்றினார்கள். அப்போது திரும்ப போய் போராட்டம் பண்ணி வரும்போது திரும்ப அதை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை. திமுக வந்தது ஆனால் திமுக செயல்படுத்தவில்லை” என தெரிவித்தார்.
இன்று எந்தெந்த மாவட்டங்களின் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம்!
அதிமுகவில் இரட்டைத் தலைமைகளுக்கிடையே பனிப்போர் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் செல்லூர் ராஜு ஓபிஎஸ் பக்கம் இருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என்று கூறி மீண்டும் எடப்பாடி பழனிசாமியை செல்லூர் ராஜு சீண்டுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி