ஆப்நகரம்

அன்பில் மகேஷ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த செங்கோட்டையன்: மாணவர் சேர்க்கைக்கு யார் காரணம்?

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அதிமுக அரசின் நடவடிக்கைகள் தான் காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 28 Apr 2023, 7:53 am
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2016 - 21ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை குறித்து பேசினார். “2016 - 21ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சியில் எப்படி பட்ட வீண் செலவுகளை அவர்கள் செய்து இருக்கிறார்கள் என்பதை சி ஏ ஜி அறிக்கை வெளிப்படையாக காண்பித்துள்ளது.
Samayam Tamil tn govt school


எங்கள் ஆட்சி அமைந்து எந்த அளவுக்கு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்ந்தி இருக்கிறோம் என்பதை பெருமையோடு கூற முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் அளவிற்கு மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்” என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம் சி.ஏ.ஜி அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை மீது வைக்கப்பட்டிருக்க குற்றச்சாட்டுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், “அன்றைய நிலையில் கொரோனோ தொற்று காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வர இயலவில்லை. இதுதான் பொருட்கள் வீணானதற்கு காரணம். மற்றபடி ஆடிட்டிங் பொறுத்தவரை, எந்தெந்த நிலையில் இருந்து எங்கெங்கு நிதிகள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறதென காட்டுகிறார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தெளிவாகவே செயல்பட்டிருக்கிறோம். அதற்கு மேல் இதில் விளக்கம் சொல்ல தேவை இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் பள்ளிக்கல்வித்துறை பொற்காலமாக அமைந்து இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறினார்.
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? ரேஸில் முந்தும் அதிகாரி இவர்தான்!
மேலும் அவரிடம் அரசு பள்ளியில் 3 சதவீதம் வருகை குறைந்து உள்ளதாக கூறப்பட்டது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “புள்ளி விவரம் யாரிடம் இருக்கிறது என்பது தான் கேள்வி. 3 சதவீதம் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள் என்றால் எந்த புள்ளி விபரத்தை வைத்து கூறுகிறார்கள் என்பது எனது கேள்வி. இப்போது அவர்கள் சொல்வதுபோல 11 லட்சம் பேர் இணைந்து இருக்கிறார்கள் என்றால் அது அதிமுக அரசால் தான். ஏனெனில் எங்கள் ஆட்சியில்தான் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்பு கொண்டு வந்தோம்; 7.5 சதவீத இட ஒதுக்கீட்டையும் கொண்டு வந்ததோம். அவற்றினால்தான் இப்போது மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.
இலவச மடிக்கணினி எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
கொரோனாவிற்கு முன்பு ஒரு சதவீதம் பேர் என்ற அளவில்தான் தனியார் பள்ளிக்கு சென்றார்கள். நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மீண்டும் அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் திரும்பி உள்ளனர். அரசு பள்ளிக்கு வந்தால் கட்டணம் இல்லை என்பதால் அவர்கள் அரசு பள்ளிக்கு வந்து கொண்டு இருக்கின்றனரே தவிர மாற்றம் எதுவும் இல்லை” என்றார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி