ஆப்நகரம்

வேந்தர் மூவிஸ் மதனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

TNN 23 Nov 2016, 1:33 pm
சென்னை: கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil seven days police custody for vendharmoviesmadhan
வேந்தர் மூவிஸ் மதனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.74.39 கோடி வசூல் செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் வேந்தர் மூவிஸ் மதன். இந்த வழக்கு தொடர்பாக #SRMPachamuthu எஸ்ஆர்எம் குழும நிறுவனத் தலைவர் பச்சமுதுவும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் #VendharMoviesMadhan மதன், தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். இந்நிலையில், திருப்பூரில் வைத்து மதனை தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.

திருப்பூரில் பிடிபட்ட மதனை சென்னை கொண்டு வந்த போலீசார், சென்னை எழும்பூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தபடுத்தினர். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மதன் சார்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. அதேசமயம், மதனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி குற்றப்பிரிவு போலீசாரும் மனு அளித்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மதனை வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும், மதனின் ஜாமீன் மற்றும் குற்றப்பிரிவு போலீசாரின் மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் மாதம் 23-ம் தேதி (இன்று) நடைபெறும் எனவும் உத்தரவிட்டார். அதனையடுத்து, சென்னை புழல் சிறையில் மதன் அடைக்கப்பட்டார்.

அதன்படி, குற்றப்பிரிவு போலீசார் அளித்திருந்த மனுவின் மீதான விசாரணை, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றதில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, மதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Seven days Police custody for #VendharMoviesMadhan

அடுத்த செய்தி