ஆப்நகரம்

வெளுத்துக் கட்டும் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - பெரிய லிஸ்டே இருக்கு பாருங்க!

கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Dec 2019, 8:14 am
கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil several district schools are holiday today due to heavy rain in tamil nadu
வெளுத்துக் கட்டும் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - பெரிய லிஸ்டே இருக்கு பாருங்க!


பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 3% அதிக பருவமழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது.

கனமழை எச்சரிக்கை

அதேசமயம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

விடுமுறை அறிவிப்பு

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

திருவள்ளூர், தூத்துக்குடியில் கனமழை நீடித்து வருகிறது. எனவே இங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை

இதையடுத்து கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தேர்வுகள் ஒத்திவைப்பு

இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறுவதாக அறிக்கப்பட்டிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி