ஆப்நகரம்

இன்று வெளுத்து வாங்கும் மழை - பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 18 Nov 2019, 11:14 am
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக பருவமழையின் தீவிரம் குறைந்தது.
Samayam Tamil Rain


இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த சூழலில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

திருப்பதி லட்டு: பக்தர்கள் கவலைகொள்ள தேவையில்லை!

மேலும் ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினி விமர்சனம்

சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் திருவள்ளூர், நீலகிரி, தஞ்சை, திருவாரூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சேலம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் இருந்து தான் போட்டியிட வேண்டும்: அதற்குள் ரசிகர்கள் தீர்மானம்

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கடலூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடல்பகுதிகளில் 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி