ஆப்நகரம்

Chennai Rains: விடிய விடிய புரட்டி எடுத்த கன மழை; விடுமுறை நாளில் மகிழ்ச்சி கடலில் நீந்திய மக்கள்!

கிறிஸ்துமஸ் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது.

Samayam Tamil 25 Dec 2019, 8:15 am
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இதில் போதிய மழை கிடைத்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை பெருமளவு வாரி வழங்கிய போதிலும் வடகிழக்கு பருவமழை சற்றே பின்னடைவை சந்தித்தது.
Samayam Tamil Rain4


இருப்பினும் அவ்வப்போது வெளுத்துக் கட்டிய மழையால் நீர்நிலைகள் நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை எவ்வாறு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு!

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும். குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

கருணாநிதி ஏன் ஸ்டாலினை திமுக தலைவராக்கவில்லை: ஹெச்.ராஜா விளக்கம்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனர். நேற்று காலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

இந்த சூழலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, கமலாபுரம், மாங்குடி, ஆண்டிபந்தல், சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல், பேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.

இதேபோல் நாகை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுவையில் பேரணி: நாராயணசாமி அறிவிப்பு

மேலும் தஞ்சை மாவட்டம் திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அடுத்த செய்தி