ஆப்நகரம்

தொழிலாளர்கள் உயிரை பறித்த இடி; புதுக்கோட்டை விவசாய நிலத்தில் நிகழ்ந்த பயங்கரம்!

இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக கூடாரத்தில் ஒதுங்கிய போது ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Oct 2019, 10:10 am
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Samayam Tamil Thunderstorm


புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் வைத்தூர் அருகே சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் 20 பேர், தண்ணீர் பந்தல்பட்டி பகுதியில் வேர்க்கடலை பிடுங்கும் பணியில் ஈடுபட்டனர்.

மைக்க தூக்கி அடிச்சா விஜயகாந்த், கடிச்சு துப்புனா ராஜேந்திர பாலாஜி!

அவர்களுக்கு வசதியாக தற்காலிகக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இடி விழுந்துள்ளது.

இதில் கலைச்செல்வி(45), லட்சுமி அம்மாள்(64), சாந்தி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சித்ரா, நாகலட்சுமி, ஜெயலட்சுமி, ரங்கம்மாள், தமிழரசு உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர்.

செம மழையாம்; அதுவும் நிற்காமல் பெய்கிறது; புதுக்கோட்டை மாணவர்களுக்கு இன்று ஜாலி!

இவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழலில் விஜயா(45) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, எஸ்.பி செல்வராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் உமா மகேஸ்வரி, விவசாய தொழிலாளர்கள் இடி தாக்கி உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

பருவமழை நாளைக்கு தான்; இன்னைக்கே புரட்டி எடுத்தாச்சு- மழையால் நனைந்த தமிழகம்!

உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும். தொடர் மழை பெய்து வரும் சூழலில், இதுபோன்ற திறந்த வெளியில் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அடுத்த செய்தி