ஆப்நகரம்

சரத் பிரபு தற்கொலை செய்ய வாய்ப்பில்லை : குடும்பத்தினர் சந்தேகம்

யூ.சி. எம் .எஸ் மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த திருப்பூர் மாணவர் சரத்பிரபு நன்றாக படிப்பார் என்றும் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்பில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Samayam Tamil 17 Jan 2018, 3:40 pm
யூ.சி. எம் .எஸ் மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த திருப்பூர் மாணவர் சரத்பிரபு நன்றாக படிப்பார் என்றும் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்பில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
Samayam Tamil sharath prabhu will not suicide his family members were suspicious about his death
சரத் பிரபு தற்கொலை செய்ய வாய்ப்பில்லை : குடும்பத்தினர் சந்தேகம்


திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்த சரத் பிரபு , கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு முடித்து, மெரிட் மூலம் யூ.சி. எம் .எஸ் மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்பு படித்துவருகிறார். இன்று காலையில் மாணவர் சரத் பிரபு கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று செய்திகள் வெளியானது. இன்லின் மருந்தை தன் உடலில் செலுத்தி தற்கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

இவரது உடலை டெல்லி காவல்துறையினர் கைப்பற்றி , மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மரணம் தொடர்பாக முன்னுகுப் பின் முறனான தகவலை கல்லூரி நிர்வாகம் அளித்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். முதலில் சரத் பிரபு படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் பின்பு அவரது உடல் கழிப்பறையில் இருந்தாகவும் கல்லூரி நிர்வாகம் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி