ஆப்நகரம்

“சீனாவிற்கு மருந்து கொடுத்த தணிகாசலம்” சிறையிலிருந்து நிபந்தனைகளுடன் வெளியே வந்தார்!

கொரோனாவுக்கு மருந்து உள்ளது என சமூக வலைதளத்தில் வதந்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தணிக்காசலம் ஜாமீன் பெற்றார்.

Samayam Tamil 10 Jul 2020, 2:28 pm
கொரோனாவுக்கு தான் மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்

முதல்வருடம் தணிகாசலம்(கோப்புப்படம்)



சென்னை கோயம்பேட்டில் சித்த மருத்துவமனை வைத்திருப்பவர் தணிகாசலம். இவர் கடந்த சில நாட்களாக, “கொரோனாவுக்கு நான் மருந்து வைத்திருக்கிறேன். சீனாவுக்குத் நான் சொன்ன மருந்துதான் கை கொடுத்தது. தமிழ்நாடு முதல்வர் என்னிடம் 2 பேரை கொரோனா சிகிச்சைக்கு அனுப்பி வைத்திருந்தார், அவர்களையும் குணப்படுத்தி விட்டேன்” என சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வீடியோக்கள் வெளியான அதே வேளையில், “கொரோனா தொடர்பாக வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனச் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்து வந்தது. அதன்படி சுகாதாரத் துறை அளித்த புகாரின் பெயரில், நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு!

சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தணிகாசலம் தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வந்தார்.

இந்நிலையில், இந்த மனுவை ஏற்ற சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. அதன்படி தணிகாசலம் சென்னையை விட்டு வெளியே செல்ல முடியாது. சென்றால் கைது செய்யப்படுவார்.

அடுத்த செய்தி