ஆப்நகரம்

பெண்களுக்கு ரூ.22,000 - செல்லூர் ராஜு சொன்ன தகவல்!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

Authored bySM Prabu | Samayam Tamil 1 Jan 2023, 12:02 pm
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது குடும்பத்துடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாமி தரிசனம் செய்தார்.
Samayam Tamil செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு


அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி அம்மனை வேண்டியுள்ளேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். அதிமுகவிற்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும்.அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர். வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும், புதிய வைரஸ் தொற்று இல்லாத ஆண்டாக மாற வேண்டும் என்றார்.

2022ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக உள்ளது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் பெரிய மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும், தனி மனிதர், தனி குடும்பம் என்பது இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாட்சியாக அதிமுக செயல்படுவதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “திமுக அனைத்து மகளிர்களுக்கும் ஆயிரம் வழங்குவார்கள் என கூறினார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மாதம் ஆயிரம் ரூபாய் என்று வழங்கியிருந்தாலும், சிலிண்டர் மானியம் மாதம் 100 என கணக்கிட்டால் இதுவரை ஒவ்வொரு மகளிர்களுக்கும் திமுக அரசு ரூ.22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. இப்போது பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய்க்கே தடுமாறி அறிவித்துள்ளார்.” என்று குற்றம் சாட்டினார்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: அரசு எடுக்கும் முடிவு!
“அதிமுக போராட்டத்திற்கு பயந்துதான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிப்பு வந்துள்ளது. 33 ரூபாய்க்கு எத்தனை அடி கரும்பு கொள்முதல் செய்து. எத்தனை அடி பொதுமக்களுக்கு வழங்குவார்கள் என தெரியவில்லை. எத்தனை அடி கரும்பு வழங்கப்படுகிறது என கடையில் எழுதி வைக்க வேண்டும். திமுக அரசு பல்வேறு வரி உயர்வு, விலைவாசி உயர்வுக்கு பின்னர் அறிவித்த பொங்கல் பரிசு அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போலதான் உள்ளது.” என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி