ஆப்நகரம்

வந்தே மாதரம் பாடல் விவகாரம்; தமிழக அரசே முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவது குறித்து தமிழக அரசே கொள்கை முடிவு எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

TNN 10 Nov 2017, 2:10 am
கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவது குறித்து தமிழக அரசே கொள்கை முடிவு எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Samayam Tamil singing of vande mataram court leaves it to government
வந்தே மாதரம் பாடல் விவகாரம்; தமிழக அரசே முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2013 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில், வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் முதலில் பாடப்பட்டது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சமஸ்கிருதமா, வங்க மொழியா என்ற சர்சசை நிலவியது.

இது குறித்து விண்ணப்பதாரர் ஒருவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, வங்க மொழியில் தான் முதலில் எழுதப்பட்டது என்றும் பின்னர், சமஸ்கிருதத்தில் பாடப்பட்டது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வந்தே மாதரம் பாடலை கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பாடுவது குறித்து தமிழக அரசே கொள்கை முடிவு எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி