ஆப்நகரம்

சிங்கள வாலிபர் மண்டபம் முகாமில் இருந்து மாயம்..! போலீசார் கலக்கம்...

ராமநாதபுரம் மாவட்டம் அகதிகள் முகாமின் தனி குடியிருப்பில் தங்கியிருந்த சிங்கள வாலிபர் மாயமானதால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 15 Apr 2020, 1:59 pm
இலங்கையைச் சேர்ந்த ஜோய் மகன் அஜய் குமார் (30). சிங்களரான இவர், கடந்த 2017ல் எவ்வித ஆவணமும் இன்றி தனுஷ்கோடி வந்தார். சட்ட விரோதமாக ஊடுருவிய இவர் மீது கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையம், தனுஷ்கோடி காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.
Samayam Tamil சிங்கள வாலிபர் மாயம்


இந்நிலையில் விடுவிக்கப்பட்ட இவர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் தனி குடியிருப்பில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு தனி துணை ஆட்சியர் சிவக்குமாரி, இலங்கை அகதிகள் குடியிருப்புகள் குறித்து நேற்று முன் தினம் ஆய்வு செய்தார். அப்போது அஜய் குமார் மார்ச் 17 ஆம் தேதி முதல் தனி குடியிருப்பில் இருந்து மாயமானது தெரிந்தது.

கொரோனாவால் பாழாகிப் போன வெள்ளரிக்காய் விவசாயம்!

இது குறித்து இலங்கை அகதிகள் சிறப்பு போலீசார் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனர். இதேபோல இங்கு தனி குடியிருப்பில் போலீஸ் சிறப்பு கண்காணிப்பில் தங்கியிருந்த தயாபரராஜ்- உதயகலா தம்பதி தங்களது 3 குழந்தைகளுடன் கடந்த 10 மாதங்களுக்கு முன் மாயமனது குறிப்பிடத்தக்கது.

கணவரின் சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் ஒரு மாதம் தங்கி விட்டு, பின்னர் திரும்பி விடுவதாக உரிய அனுமதி பெற்றுச் சென்ற இவர் அங்கிருந்து நியூசிலாந்து தப்பிச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

அடுத்த செய்தி